‘வீட்டுக்குள் கேட்ட அலறல் சத்தம்’.. பதறி ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்.. 3 வயது குழந்தைக்கு தாயின் கணவரால் நடந்த கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 17, 2020 10:59 AM

குடிபோதையில் குழந்தையின் பிறப்புறுப்பை தாக்கி துன்புறுத்திய தாயின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

3 year old brutally beaten for month by drunkard step father

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அம்பலப்புழா பகுதியை சேர்ந்தவர் வைஷாக். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். அப்பெண்ணுக்கு 3 வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளது. ஆனால் அப்பெண்ணின் குழந்தையை வைஷாக் தனது மகனாக பாவிக்கவில்லை. இதனால் சிறுவனை அடிக்கடி வைஷாக் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் மதுபோதையில் இருந்த வைஷாக் சிறுவனை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதனால் வலிதாங்க முடியாமல் சிறுவன் அலறி துடித்துள்ளான். சிறுவனின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், வைஷாக்கிடமிருந்து சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்தப் பார்த்த மருத்துவர்கள், சிறுவனது பிறப்பு உறுப்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் மீண்டும் வீட்டுக்கு செல்ல பயமாக உள்ளதாக மருத்துவமனையில் சிறுவன் கண்ணீர் மல்க கதறி அழுததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனை அடுத்து சிறுவனை தாக்கிய வைஷாக்கை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் சிறுவனின் தாயிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 3 வயது குழந்தையை தாயின் கணவர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #ATTACKED #STEPFATHER #BABY