'டிரான்ஸ்பார்மர் மீது ஏறி... மின்கம்பியை பிடித்து... தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!... நெஞ்சை உலுக்கும் காரணம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணம் ஆகாத விரக்தியில் டிரான்ஸ்பார்மரில் மின்கம்பியை பிடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன். இவர், கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், இவருக்கு திருமணம் செய்ய பல இடங்களில் பெண் பார்த்துள்ளனர். எதுவும் கைகூடுவில்லை.
இதனால், வாழ்க்கையில் விரக்தி அடைந்த மணிகண்டன் இரண்டு தினங்களுக்கு முன், அவர் பகுதியில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மரில் ஏறி, அதில் உள்ள மின்கம்பியை பிடித்துள்ளார்.
மின்சாரம் தாக்கி டிரான்ஸ்பார்மரில் இருந்து தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மணிகண்டன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
