கிரிக்கெட் விளையாடும்போது நபர் ஒருவரின் மேல் விழுந்த பந்து.. ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்ட கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 15, 2020 12:45 PM

கிரிக்கெட் விளையாட்டின்போது பந்து மேலே பட்டதால் 12 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man shoots at boy after hit by cricket ball in Uttarakhand

உத்தரகாண்ட் மாநிலம் தஹ்ரி மாவட்டத்தில் உள்ள பேஹ்டி என்ற கிராமத்தில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராம்லால், பிஜேந்திர கண்டாரி என்ற இரண்டு பேர் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது ஒரு சிறுவன் அடித்த பந்து ராம்லால் மீது பட்டு கீழே விழுந்துள்ளது.

இதனை அடுத்து பந்தை எடுப்பதற்காக மகேஷ் (12) என்ற சிறுவன் சென்றுள்ளான். அப்போது பந்து மேலே விழுந்த ஆத்திரத்தில் பிஜேந்திர கண்டாரி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பந்து எடுக்க வந்த சிறுவன் மீது ராம்லால் சுட்டுள்ளார். இதில் சிறுவனின் வலது கண் ஓரத்தில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்துள்ளான்.உடனே அப்பகுதியில் இருந்த மக்கள் சிறுவனை மீட்டு மருத்துவனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து சிறுவனை துப்பாக்கியால் சுட்ட ராம்லால் மட்டும் அவரது நண்பர் பிஜேந்திர கண்டாரியையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். சிறுவர்கள் விளையாடிய பகுதியில் அவர்கள் இருவரும் மது அருந்துவிட்டு பேசிக்கொண்டு இருந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. பந்து மேலே விழுந்ததால் சிறுவனை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRICKET #CRIME #UTTARAKHAND #GUNSHOOT