‘காதலனுடன்’ சேர்ந்து ‘மிளகாய்ப் பொடி’ தூவி... ‘15 வயது’ மகள் செய்த ‘உறையவைக்கும்’ காரியம்... ‘காதலர்’ தினத்தன்று பெண் ‘காவலருக்கு’ நேர்ந்த கொடூரம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் காதலைக் கண்டித்த தாயை காதலனுடன் சேர்ந்து 15 வயது சிறுமி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி காவல்துறையில் தலைமை காவலராக பணியாற்றி வரும் பெண் ஒருவருடைய 10ஆம் வகுப்பு படிக்கும் மகளும், அவர்களுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜிதேந்திரா குமார் (19) என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் காதலர் தினத்தன்று ஜிதேந்திரா வீட்டிற்கு வந்ததால், மகள் காதலிக்கும் விஷயம் பெண் காவலருக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மகளை அடித்து கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சிறுமி, காதலனுடன் சேர்ந்து தாயைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, சம்பவத்தன்று அவர் தாயின் முகத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவியுள்ளார். அதன்பிறகு காதலனுடன் சேர்ந்து தாயைக் கிரைண்டர் கல்லால் அடித்தும், கழுத்தை கயிற்றால் இறுக்கியும் கொலை செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பெண் காவலருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே, காதலனுடன் சேர்ந்து தாயைக் கொலை செய்ததை சிறுமி கூறியுள்ளார். இதுகுறித்து பெண் காவலரின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிறுமியையும், ஜிதேந்திராவையும் கைது செய்துள்ளனர்.
