'கடத்திட்டுப்போய்... இரும்பு கம்பியால அடிச்சு'... மாணவியை துடிதுடிக்க வைத்த வெறியர்கள்... வீட்டுக்கு போகும் வழியில் நடந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Feb 15, 2020 11:12 AM

கல்லூரியில் படிக்கும் மாணவியை 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

college student brutally raped by gangsters while returning home

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள கல்லூரியில் எம்பிஏ படிக்கும் மாணவி ஒருவர், நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் கல்லூரியில் இருந்து வீடு திரும்பியபோது, 4 பேர் கொண்ட கும்பல் அந்த மாணவியை கடத்திச் சென்றுள்ளது. பின்னர் மாணவியை 4 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அவர்களுடன் மாணவி கடுமையாக போராடியுள்ளார். இதனால், கோபமடைந்த அந்த கும்பல் இரும்பு கம்பியால் மாணவியை தாக்கி, பின்னர் துடிக்க துடிக்க பலாத்காரம் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மாணவி மயக்கமடைந்ததும், 4 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

பலத்த காயமடைந்த மாணவி மீரட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகினற்னர்.

Tags : #CRIME #RAPE #STUDENT