“பெற்ற குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த தாய்” “விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்”

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Behindwoods News Bureau | Nov 01, 2019 11:59 AM

தேனி மாவட்டம் போடி அருகே காந்தி நகரை சார்ந்த பால்பாண்டியின் மனைவி லட்சுமி (36 ). பால் பண்டி இறந்த பிறகு தன் மூன்று மகள்களுடன் தனியே வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு காபியில் விஷம் கலந்து கொடுத்து தன் குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து திட்டத்தை நிறைவேற்றினார். அதில் இளைய மகளை தவிர மூன்று பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தற்போது  திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரியப்பா மகனுடன் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு காதல் இருந்திருகிறது. அதை அறிந்த காதலன் வீட்டார் காதலனின் அப்பா,அம்மா, சித்தி, மாமா ஆகிய நன்கு பெரும் வந்து தகாத வார்த்தைகளை பேசி அவமானப்படுத்தியுள்ளனர். அவமானத்தை சகித்துக் கொள்ள இயலாமல் லட்சுமி தற்கொலை முடிவை எடுத்துள்ளார். போலிசார் சம்பந்த்தப்பட்ட நால்வரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

mother kill own kids and commit sucide case is turned
Tags : #MURDER #SUICIDEATTEMPT #LOVE #FAMILYISSUE