'வீடு திரும்பாத ஆட்டோ ஓட்டுநர்'... 'கணவன், மனைவியால்’... ‘நடந்த அதிர்ச்சி சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 21, 2019 06:33 PM

சென்னையில் தன்னுடன் தவறான பழக்கத்தில் இருந்து வந்த, முன்னாள் ரவுடியான ஆட்டோ ஓட்டுநரை, கணவருடன் சேர்ந்து இளம்பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

auto driver murdered by husband and wife in chennai kolathur

கொளத்தூரை அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் தனது பெற்றோர், மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தவர் ஆட்டோ ஓட்டுநரான சுரேஷ். இவர் கடந்த 14-ம் தேதி வழக்கம்போல் சவாரிக்குச் சென்றார். பின்னர் இவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது தாயார் கலா கொரட்டூர் போலீசில் புகாரளித்தார். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், சுரேஷை தேடி வந்த நிலையில், வடபெரும்பாக்கம் அருகே புதர் ஒன்றில் இருந்து தலையில்லாத ஆண் ஒருவரின் உடலை மீட்டு செங்குன்றம் போலீசார் விசாரித்து வருவது தெரியவந்தது.

கொரட்டூர் போலீசாரின் விசாரணையில் அது காணாமல் போன சுரேஷின் உடல் என கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியைடைந்த சுரேஷின் தாயார், பாடி கலைவாணர் நகரில் உள்ள அம்மா உணவகம் அருகில், இட்லி கடை நடத்தி வரும் 29 வயதான அம்மு என்ற கார்த்திகா மீது சந்தேகம் இருப்பதாக சுரேஷின் தாயார் தெரிவித்தார். இதையடுத்து நடத்திய விசாரணையில், இளம்பெண் கார்த்திகாவுடன் பழக்கம் இருந்துவந்தது தெரியவந்தது. இந்தப் பழக்கம் நீண்ட காலமாக தொடர்ந்தநிலையில், திடீரென சுரேஷிடம் பேசுவதை கார்த்திகா தவிர்த்து வந்துள்ளார்.

சுரேஷ் தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாக தனது கணவர் ஜெயக்கொடியிடம் கூறியுள்ளார் கார்த்திகா. இதையடுத்து, காவாங்கரையை சேர்ந்த ராஜா, கொருக்குப்பேட்டையை சேர்ந்த சுந்தரகண்டன் ஆகியோருடன் சேர்ந்து சுரேஷை, அவரது ஆட்டோவில் கடத்திகொண்டுபோய், விளாங்காடுபாக்கம் அருகே சுரேஷின் தலையை வெட்டியுள்ளனர். உடலை அருகில் இருந்த முட்புதரில் வீசிவிட்டு, தலையை செங்குன்றம் அருகே உள்ள கால்வாயிலும் வீசியுள்ளனர். இதனையடுத்து கார்த்திகா, அவரது கணவர் ஜெயக்கொடி, ராஜா, சுந்தரகாண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MURDER