'பாலியல் பலாத்காரம்'.. 'ஆசிரியர் மீது புகார்'.. 'தேர்வறையில் எரித்துக் கொல்லப்பட்ட மாணவி!'.. 16 பேருக்கு தூக்கு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Oct 24, 2019 08:01 PM

வங்கதேசத்தின் மதரஸா பகுதியில் கடந்த மார்ச் மாதம் கல்லூரி மாணவி நுஸ்ரத் ஜகான் ரஃபியை, ஆசிரியர் சிராஜ் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததை அடுத்து அப்பெண்ணின் தாயார் ஆசிரியர் மீது போலீஸில் புகார் கொடுத்தார்.

16 members sentenced in bangladesh girl student murder

அதன் பின்னர் கல்லூரிக்கு தேர்வெழுத சென்ற மாணவியை ஆசிரியர் சிராஜ் தனது ஆட்களுடன் மிரட்டியபோது, மாணவி புகாரை வாபஸ் வாங்க மறுத்ததால், அங்கேயே தனது ஆடையினாலேயே கை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்டார். அந்த நிலையிலும், கொழுந்துவிட்டு எரிந்தபடி தேர்வறை வளாகத்தில் ஓடினார்.

அப்போது சிலர் கூடி அந்த நெருப்பை அணைத்ததோடு, ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்து, அப்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக கடைசி மூச்சுள்ள வரை போராடுவேன் என்று அம்மாணவி வீடியோவில் கூறினார்.

ஆனால் சிகிச்சைப் பலனின்றி மாணவி உயிரிழந்தார். அதன் பிறகுதான் அவருக்கு நேர்ந்த அநீதிக்கு எதிரான கோபம் இளைஞர்களிடையேயும், பொதுமக்களிடையேவும் நெருப்பாய் பற்றத் தொடங்கியது. வீதிக்கு வந்து போராடினர். எதிர்வினையாய் 18 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஜூன் மாதம் தொடங்கிய விசாரணையின் முடிவில் 87 சாட்சியங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட 16 பேர் குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்டு, அத்தனை பேருக்கும் மரண தண்டனை வழங்கி, இன்று (அக்டோபர் 24-ஆம் தேதி) உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : #VERDICT #COURT #MURDER #SENTENCED #NUSRATJAHANRAFI