'கள்ளக்காதல கண்டிச்சாங்க!'.. 'என் பொய்யை நம்பி கொன்னுட்டார்'.. கைதான தம்பதி!.. தவிக்கும் குழந்தைகள்!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Oct 24, 2019 09:04 PM
சென்னை அம்பத்தூர் பாடி பகுதியைச் சேர்ந்த க்ரைம் சுரேஷ் என்பவரின் கொலை வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்கொடி, அவரது மனைவி அம்மு என்கிற கார்த்திகா மற்றும் ஜெயக்கொடியின் நண்பர்களான ராஜா, சுந்தர காண்டன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஜெயக்கொடியின் மனைவியாகவும் இரண்டு குழந்தைகளின் அம்மாகவும், பொறுப்பான இட்லி கடை வைத்திருக்கும் பெண்ணாகவும் இருந்த கார்த்திகாவின் கடைக்கு ஆட்டோ ஓட்டிக்கொண்டு வந்த சுரேஷ், காரித்திகாவின் கையைப் பிடித்து இழுத்ததாக கார்த்திகா சொன்னதால், அந்த ஆத்திரத்தில் ஜெயக்கொடி சுரேஷை ரத்தம் வரும் அளவுக்கு கட்டையை எடுத்து அடித்திருக்கிறார். ஆனால் ஜெயக்கொடி உடனே தன் நண்பர்களுக்கு போன் செய்து, இந்த விஷயத்தைச் சொல்லி உதவிக்கு அழைத்திருக்கிறார்.
அப்போது நண்பர்களுடன் சேர்ந்து சுரேஷின் உடலை தூக்கிச்சென்ற ஜெயக்கொடி, மனைவியிடம், சுரேஷை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதாகச் சொல்லிச் சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியில் தீராத கோபத்தால் சுரேஷை தன் நண்பர்களுடன் இணைந்து ஜெயக்கொடி கொன்றுவிட்டதாக வீட்டுக்கு வந்து கார்த்திகாவிடம் சொல்லியிருக்கிறார். பின்னர் போலீஸ் விசாரணையில் பாடியைச் சேர்ந்த க்ரைம் சுரேஷ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதற்கு தாங்கள்தான் காரணம் என ஜெயக்கொடியும் அவரது நண்பர்களும் ஒப்புக்கொண்டனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் என்பவரை போலீஸார் தேடி வரும் நிலையில், முதலில் எதுவும் பேசாதிருந்த கார்த்திகா, தற்போது விசாரணையின் போது கொடுத்த வாக்குமூலம் அதிரவைத்துள்ளது. அதன்படி, தி.நகரின் கடை ஒன்றில் ஜெயக்கொடி பிரபல ஷோ ரூம் ஒன்றில் ஃபுளோர் மேலாளராக இருந்ததாகவும், அப்போது தனது இட்லி கடைக்கு அடிக்கடி வரும் சுரேஷுடன் நெருங்கி பழகியதாகவும், விஷயம் வீட்டுக்குத் தெரிந்து கண்டித்ததாகவும் தெரிகிறது.
ஆனால் மீண்டும் கடைக்கு வந்த சுரேஷிடம் கார்த்திகா தன் நிலையை எடுத்துச் சொல்ல அவர் புரிந்துகொள்ள மறுத்துள்ளார். அந்த நேரம் பார்த்து தன் கணவர் ஜெயக்கொடி வர, உடனே பதற்றத்தில் கார்த்திகா, சுரேஷ் தன் கையைப் பிடித்து இழுத்ததாக பொய் கூற, ஆத்திரத்தில் ஜெயக்கொடி அவரை ஒரேடியாக அடிக்க, அவர் மயங்கி விழ, பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லி நண்பர்களுடன் சேர்ந்து செல்லும் வழியில் கொன்று வீசியிருக்கிறார் ஜெயக்கொடி. இந்த அதிர வைத்த சம்பவத்தில் கார்த்திகாவும் ஜெயக்கொடியும் கம்பி எண்ணுகின்றனர். இவர்களது ஒரு தவறும் செய்யாத 2 குழந்தைகளும் தாய், தந்தையரின் அரவணைப்பின்றி தவித்து வருகின்றனர்.
படத்தில்: இடதுபுறம் - கார்த்திகா, வலதுபுறம் - க்ரைம் சுரேஷ்.