'அந்த கொலைய பாத்ததானல தீபாவளிக்கு என்ன கொல்ல ஸ்கெட்ச் போட்ருக்காங்க'.. 'எனக்கு 2 கொழந்தைங்க'.. கதறும் ஓவியர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 21, 2019 10:00 PM

மதுரையில் கொலைக்கு சாட்சி சொன்ன ஒருவர் தீபாவளி அன்று இளைஞர்கள் சிலரால் கொல்லப்படவுள்ளதாக வெளியான குற்றச்சாட்டு திடுக்கிட வைத்துள்ளது.

TN Murderers allegedly planed to kill witness on diwali

மதுரையின் எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்த பிரபல ஓவியர் சுந்தர் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வடமாநில நபர் ஒருவரை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் வெட்டிக்கொன்றதை நேரில் பார்த்ததை அடுத்து போலீஸாரிடம் அதனை சாட்சியாகச் சொன்னதாகவும் அதனால் அந்த இளைஞர்கள் சிறைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிறையில் இருந்து தண்டனை காலம் முடிந்து வெளிவந்த அந்த இளைஞர்களால் சுந்தருக்கு இடையூறு ஏற்படவுள்ளதாகவும், இவர்களுக்கு பயந்து தனது 2 குழந்தைகளையும் வெளியூரில் படிக்க வைத்தாலும், தொழில் காரணமாக அங்கேயே தங்கியுள்ளதாகவும் தெரிகிறது.

இதுபற்றி, தனக்கும் தன் மனைவிக்கும் போனில் அந்த இளைஞர்கள் மிரட்டல் விடுவதாக சுந்தர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தீபாவளி அன்று தன்னையும் தன் குடும்பத்தாரையும் கொல்ல திட்டமிட்டிருப்பதாக மிரட்டும் அவர்களிடம் இருந்து தங்களை காப்பாற்றுமாறு அவர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : #MADURAI #WITNESS #MURDER