'என்ன கொல்றாங்க'.. 'அம்மா எங்கமா போய்ட்டீங்க'... கதறும் சிறுவனின் வீடியோ.. வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jun 25, 2019 04:41 PM

தன்னைக் கடத்தப் போகிறார்கள் என தெரிந்தவுடன் சிறுவன் ஒருவன் அழுது, கெஞ்சி தந்து உயிருக்காக மன்றாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வலம்வந்து காண்போர் நெஞ்சை உருக வைத்துள்ளது.

TN Youths Threatening a minor Boy and Capturing video

அந்த வீடியோவில், ஒருவர், யாரிடமோ, ‘தெரிஞ்ச பையன் தான் அண்ணா. நாங்கள் தெரியாமல் தூக்கிக் கொண்டு வந்துட்டோம்னா’ என்று யாரிடமோ தகவல் தெரிவிப்பதுபோல் நடிக்கிறார். மேலும் அந்த சிறுவனிடம், ‘டேய் உன்ன ஒண்ணும் பண்ண மாட்டாங்கடா’ என்று சொல்லிவிட்டு மீண்டும், ‘அண்ணா அந்த பையன் ரொம்ப கத்துறான் அண்ணா.. கொஞ்சம் காரை எடுத்துக்கொண்டு வந்து கையை, காலைக் கட்டிப் போட்டு தூக்கிட்டு போங்கண்ணா’ என்கிறார்.

இதனிடையே சற்றும் பொறுக்காத அந்த சிறுவன், தன்னை வைத்து கிண்டலாக இளைஞர்கள் சிலர் வீடியோ எடுத்து பிராங்க் பண்ணுகிறார்கள் என்பது புரியாமல், துள்ள ஆரம்பித்து, அலறுகிறான்.  ‘என்ன விட்ருங்க.. என்ன விட்ருங்க.. அம்மா எங்கமா போயிட்ட வாம்மா.. எங்கமா என்ன விட்டுட்டு போய்ட்டீங்க.. என்ன கொல்லப் பாக்குறாங்க.. நா என்ன பண்ணுவேன்’ என்று வீலென கதறி அழுகிறான்.

ஒரு கட்டத்தில், ‘என்ன விட்ருங்கண்ணா.. எங்க வீட்ல போயி காசு எவ்ளோ வேணாலும் எடுத்துட்டு வரேன்’ என்று சொல்கிறான். இந்த சிறுவன் அழுவதைப் பார்த்து ரசிக்கும் அந்த இளைஞர்களுள் ஒருவர், விளையாட்டாக அந்தச் சிறுவனை தூக்கிக் கொண்டு செல்லும்போது சிறுவன் அழுதுத் துடிப்பதெல்லாம் என்ன மாதிரி பிராங்க் என்று நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.

ஒரு சிறுவனைக் கஷ்டப்படுத்தி, அதை ரசிப்பதெல்லாம் என்ன மனநிலையோ என்று கடுமையாக பலரும் இந்த இளைஞர்களை விமர்சித்துள்ளனர்.

Tags : #VIDEOVIRAL #MINOR BOY #TEASING #YOUNSGTERS