‘பாலத்துக்கு நடுவுல விழுந்த ஓட்டை’.. ‘யார் சொல்லியும் கேட்காம இறங்கிய நபர்’!.. பரபரக்க வைத்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 24, 2019 01:49 PM

இளைஞர் ஒருவர் பாலத்தின் நடுவே விழுந்த ஓட்டையில் இறங்கிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man jumps into the bridge hole video goes viral

நாகை மாவட்டம் அக்கரைகுளத்தில் உள்ள பழையான தேவநதி பாலம் பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையில் பாலத்தின் நடுவே திடீரென ஒரு ஓட்டை விழுந்துள்ளது. இது பாலத்தின் வழியே செல்லும் மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இதனால் உடைந்த பாலத்தை சீக்கிரம் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இளைஞர் ஒருவர் பாலத்தின் ஓட்டை வழியே இறங்கி மறுபக்கம் வெளியே வந்தார்.  ஆபத்தை உணராமல் பாலத்தின் ஓட்டையில் இறங்கிய இளைஞரின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Tags : #NAGAPATTINAM #BRIDGE #VIRALVIDEO