‘திடீரென இடிந்து விழுந்த பாலம்’.. ‘நொடியில் இடிபாடுகளில் சிக்கிய கார்கள்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Oct 07, 2019 10:58 AM

குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். பல கார்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளன.

Video Gujarat Bridge collapses in Junagadh 12 injured

குஜராத் மாநிலம் ஜுனாகத் அருகே உள்ள மலனாகா கிராமத்தில் எப்போதுமே வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும் பாலம் ஒன்று நேற்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. அப்போது பாலத்தில் சென்றுகொண்டிருந்த கார்கள் தடுமாறி விழுந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளன. இந்த விபத்தில் கார்களில் இருந்த 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதில் பல கார்கள் சேதமடைந்துள்ள நிலையில், அருகிலிருந்தவர்கள் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கடும் மழை காரணமாக பாலம் இடிந்து விழுந்ததாகக் கூறப்படும் நிலையில், இதனால் ஜுனாகத்தில் இருந்து முண்ட்ரா செல்லும் சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

 

 

Tags : #GUJARAT #JUNAGADH #BRIDGE #COLLAPSE #VIDEO #CAR