‘நாம ஒரு பக்கம் வீசுனா அது ஒரு பக்கம் போகுதே’.. ‘பந்தை நழுவவிட்ட ஜடேஜா’.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Oct 04, 2019 07:52 PM

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா நோ பால் வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH : Jadeja bowls a 5 bounce delivery to Faf du Plessis

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் முடிந்துவிட்ட நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சற்று தடுமாறி வருகிறது. மூன்றாம் நாள் ஆட்ட நேரமுடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 385 ரன்களை தென் ஆப்பிரிக்கா எடுத்துள்ளது. இதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். 

இப்போட்டியின் 39 -வது ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா கை நழுவி நோ பாலாக வீசினார். தரையில் 5 முறை குத்தி மெதுவாக சென்ற பந்தை தென் ஆப்பிரிக்க கேப்டன் டு ப்ளிஸிஸ் அடிக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதேபோல் 2016 -ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது ஜடேஜா கை நழுவி நோ பால் வீசிய வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2016-2019 😂

A post shared by cricket.heaven.2 (@cricket.heaven.2) on

Tags : #RAVINDRA JADEJA #BCCI #INDVSA #TEAMINDIA #TEST #NOBALL #VIRALVIDEO #CRICKET