‘ஒய் திஸ் கொலவெறி’.. ‘திடீரென ஆக்ரோஷமான யானை’ வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Oct 15, 2019 01:08 PM

பீகாரில் யானை ஒன்று திடீரென சாலையோரமாக இருந்த டிராக்டரை நொறுக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

WATCH: Angry elephant hit by the tractor video goes viral

பீகார் மாநிலம் கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் உள்ள மோத்திஹரி என்ற இடத்தில் பாகனுடன் யானை ஒன்று வந்துள்ளது. யானைக்கு தேவையான தீவனத்தை யானையின் மீது வைத்து பாகன் அழைத்துக்கொண்டு வந்துள்ளார். அப்போது சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரைப் பார்த்ததும், யானை கோபமடைந்துள்ளது.

உடனே ஆக்ரோஷமான அந்த யானை டிராக்டரின் டிரைய்லரை முட்டி கீழே சாய்க்கிறது. பாகன் எவ்வள்வோ கட்டுப்படுத்த முயன்றும் யானை விட்டபாடில்லை. அதோவிடமால் டிராக்டரின் முன்பகுதியை தலையால் மோதி தள்ளுகிறது. ஒருவழியாக தானகவே சாந்தமடைந்த அந்த யானை அமைதியாக அங்கிருந்து செல்கிறது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags : #ELEPHANT #TRACTOR #VIRALVIDEO