‘தங்கச்சியை இப்டி செஞ்சிட்டாங்களே’!.. தோப்பில் சடலமாக கிடந்த பள்ளி சிறுமி..! பக்கத்துவீட்டுக்காரரின் பகீர் வாக்குமூலம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 10, 2019 10:31 PM

தோப்புக்குள் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

TN Schoolgirl abused and killed by neighbour in Nagapattinam

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சித்தன்காத்திருப்பு பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடி அலைந்துள்ளனர். அப்போது அருகில் உள்ள தோப்பு ஒன்றில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் ரத்தக்காயங்களுடன் சிறுமி கிடந்துள்ளார். இதனைப் பார்த்து பதறிப்போன பெற்றோர் உடனே அருகில் உள்ள மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரர் கல்யாணசுந்தரம் (30) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணான பதிலளித்துள்ளார். இதனை அடுத்து அவரிடம் பல கிடுக்குப்பிடி கேள்விகளை போலீசார் எழுப்பியுள்ளனர். அப்போது சிறுமியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீசாரிடம் கல்யாணசுத்தரம் அளித்த வாக்குமூலத்தில், ‘நீண்ட நாட்களாக சிறுமியை நோட்டமிட்டேன். நேற்று வீட்டின் பின்புறம் சிறுமி சென்றுகொண்டிருக்கும்போது வாயைப் பொத்தி அருகில் உள்ள காட்டுக்குள் இழுத்துச் சென்றேன். அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தேன். அப்போது சிறுமி சத்தமிட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்’ என அவர் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது கல்யாணசுந்தரமும் உடன் இருந்துள்ளார். அப்போது தங்கச்சியை இப்படி செஞ்சிட்டாங்களே என கதறி அழுதுள்ளார். அதனால் அவர்மீது யாருக்கும் சந்தேகம் எழாமல் இருந்துள்ளது. ஆனால் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கல்யாணசுந்தரம் சிக்கியுள்ளார்.

Tags : #SEXUALABUSE #CRIME #MURDER #KILLED #NAGAPATTINAM #SCHOOLGIRL #NEIGHBOUR