‘சொன்ன வாக்குறுதிய நிறைவேத்தல’ மேயரை காரில் கட்டி தரதரவென இழுத்து சென்ற மக்கள்’.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Oct 10, 2019 04:13 PM

தேர்தலில் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறி மேயரை பொதுமக்கள் காரில் கயிறு கட்டி தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

WATCH: Mexican mayor dragged through streets by people

மெக்ஸிக்கோ நாட்டின் சியாபாஸ் மாகாணத்தில் இருக்கும் லாஸ் மார்கரிட்டாஸ் நகரத்தின் மேயராக இருப்பவர் ஜார்ஸ் லூயிஸ் எஸ்காண்டோன். இவர் தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி சாலை, மின்சாரம், குடிநீர் போன்ற எந்த வசதியும் செய்யவில்லை எனக் கூறி அவரை அந்நாட்டு மக்கள் தாக்கியுள்ளனர். நேற்று முன்தினம் அவரது அலுவலகத்துக்குள் நுழைந்த மக்கள், அவரை தாக்கி சாலைக்கு இழுந்து வந்துள்ளனர்.

இதனை அடுத்து ஒரு காரில் கயிறு கட்டி மேயரை தரதரவென இழுத்து சென்றுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மேயரை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 30 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் போதை மருந்து கடத்தல் கும்பலில் தூண்டுதலால் மேயர் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #MEXICO #MAYOR #PEOPLE #VIRALVIDEO