சென்னையில் உலா வந்த 'வெள்ளை காகம்'... ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்..! வைரல் வீடியோ

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 25, 2019 08:17 AM

சென்னையில் வெள்ளை நிறத்தில் உலா வந்த காகத்தைப் பார்த்து மக்கள் வியப்படைந்தனர்.

WATCH: White Crow near kodungaiyur in Chennai, Video viral

ஒருவரை கிண்டல் செய்யும் விதமாக மேல பாரு வெள்ள காக்கா பறக்குது என சொல்வது வழக்கம். ஆனால் உண்மையாவே வெள்ளை காகம் ஒன்று உலா வந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் சீதாரமன் நகர் 7-வது தெருவில் நேற்று காலை ஏராளமான காகங்கள் ஒரே இடத்தில் கூடி இருந்துள்ளன. இதனால் என்னவென்று பார்க்க மக்கள் சென்றுள்ளனர்.

அப்போது காகக்கூட்டங்களுக்கு நடுவே ஒரு வெள்ளை காகம் நின்றுகொண்டு இருந்துள்ளது. இது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனை அடுத்து வெள்ளை காகத்தை பார்க்க மக்கள் கூடியதால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. தினமலர் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags : #CHENNAI #WHITE #CROW #KODUNGAIYUR #VIRALVIDEO