‘அசுர வேகத்தில் நடந்த பைக்ரேஸ்’ 'தூக்கிவீசப்பட்ட இருவர்'! ‘ரெண்டு துண்டான பைக்’!.. சென்னையில் நடந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 24, 2019 12:17 PM

சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்டு விபத்துக்குள்ளானதில் நடந்து சென்ற இருவர் படுகாயம் அடைந்தனர்.

Chennai bike race accident near marina 2 people injured

சென்னை மெரீனா, அடையாறு பாலம், ஆர்.கே சாலை போன்ற இடங்களில் பைக் ரேஸ் என்ற பெயரில் இளைஞர்கள் அதிவேகத்தில் செல்கின்றனர். இதனால் பல உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை அடுத்து போலீசார் நடத்திய தீவிர கண்காணிப்பை அடுத்து பைக்ரேஸ் கொஞ்சம் கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில் மெரினா சாலையில் காதைக் கிழிக்கும் சப்தங்களுடன் இன்று அதிகாலை மீண்டும் சில இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆர்.கே. சாலையை கடக்க முயன்ற இருவர் மீது பைக் வேகமாக மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பைக் இரண்டு துண்டுகளாக உடைந்து நொறுங்கியுள்ளது. இதனையடுத்து படுகாயமடைந்த திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த ரஹ்மான் மற்றும் அவரது நண்பர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விபத்துக்கு காரணமான இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாகசம் என்ற பெயரில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களால், சாலையை கடந்து சென்ற இருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #ACCIDENT #CHENNAI #BIKERACE #MARINA #INJURED