‘முரட்டுகாளையா இருக்கும்போல’.. ‘காரை பந்தாடிய காளை’!.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Nov 08, 2019 11:32 AM

சாலையில் நின்ற ஆட்டோ, கார் என சாலையில் வாகனங்களை பந்தாடிய காளையின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Furious bull smashes up car in bihar, video goes viral

பீகார் மாநிலம் ஹஜிபூர் மார்க்கெட் பகுதியில் சாந்தமாக சாலையில் சென்றுகொண்டிருந்த காளை ஒன்று திடீரென ஆக்ரோஷமாகி அருகில் இருந்த ஆட்டோவை கொம்பால் முட்டி தூக்கியது. இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை அடுத்து சாலையின் ஓரமாக நின்ற தள்ளுவண்டி ஒன்றை முட்டிக்கொண்டே சாலையின் நடுவே கொண்டு வருகிறது.

ஆக்ரோஷம் குறையாத காளை கார் ஒன்றை முட்டி தூக்குகிறது. அப்போது அங்கிருந்த சிலர் காளையின் மீது தண்ணீரை ஊற்றி விரட்ட முயற்சிக்கின்றனர். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

Tags : #BULL #CAR #BIHAR #VIRALVIDEO