‘நடுராத்திரி’! .. ‘வித்தியாசமா வந்த சத்தம்’.. ‘ரிசார்ட் நீச்சல் குளத்தில் நடந்த சம்பவம்’.. வைரலாகும் சிசிடிவி வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Nov 18, 2019 12:02 PM

பல்கேரியாவில் உள்ள ரிசார்ட் ஒன்றின் நீச்சல் குளத்தில் நள்ளிரவில் கரடிகள் குளித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Bear enjoy swimming in Bulgaria resort video goes viral

பல்கேரியாவில் மலை மீது பிரபல ரிசார்ட் ஒன்று அமைந்துள்ளது. அங்கு நள்ளிரவு வேளையில் வித்தியாசமான சத்தம் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரிசார்ட் நிர்வாகம் உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்துள்ளனர். அப்போது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

 

ரிசார்ட்டில் அமைந்துள்ள நிச்சல் குளத்தில் பழுப்பு நிற கரடிகள் ஆனந்தமாக குளிக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. முதலில் நீச்சல் குளத்தில் இறங்க சற்று பயந்த கரடிகள், பின்னர் ஆனந்தமாக இறங்கி ஆட்டம் போட்டுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Tags : #VIRALVIDEO #BEAR #RESORT