'4-ஆம் வகுப்பு மாணவியை வீடியோ எடுத்து மிரட்டி'.. ஆசிரியர் செய்த காரியம்.. தர்ம அடி கொடுத்து மக்கள் எடுத்த முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 08, 2019 06:58 PM

நாகப்பட்டிணம் 4-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப்பள்ளி ஆசிரியரை பிடித்து அடித்து மக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN teacher allegedly abused 4th standard minor girl

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே முடிகண்டநல்லூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில்,  ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பிரேம்குமார். இந்நிலையில் பிரேம் குமார் மீதுதான் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதன்படி 4-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை செல்போனில் படம் பிடித்து மிரட்டியதாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அப்பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள், ஆசிரியரை அடித்து மணல்மேடு காவல்நிலையத்தில் ஒப்படைத்ததோடு, பள்ளிக்கும் பூட்டு போட்டுள்ளனர்.

அதன் பிறகு மயிலாடுதுறை மகளிர் காவல்நிலையத்தில் ஆசிரியர் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ஆசிரியர் பிரேம் குமார் புதுமை படைக்கும் ஆசிரியர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #NAGAPATTINAM #TEACHER #SCHOOL