‘சாலையில் சென்ற கார்கள் மீது’.. ‘நொடியில் மேம்பாலம் இடிந்து விழுந்து கோர விபத்து’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Oct 11, 2019 11:42 AM

சீனாவில் மேம்பாலம் இடிந்து சாலையில் சென்ற கார்களின் மீது விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Video Bridge Collapse In China Kills Three Two Injured

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள வுக்சி நகரில் உள்ள மேம்பாலம் ஒன்று நேற்று இரவு திடீரென இடிந்து சாலையில் சென்று கொண்டிருந்த 2 கார்களின் மீது விழுந்துள்ளது. இதில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த 3 கார்கள் மற்றும் 2 லாரிகளும் கீழே விழுந்துள்ளன. மேலும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரும் சேதமடைந்துள்ளது. 

இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிரேன் உதவியுடன் விடிய விடிய இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேம்பாலத்தின் மீது சென்ற லாரி ஒன்று அனுமதிக்கப்பட்டதை விட அதிக லோடு ஏற்றிச் சென்றதாலேயே விபத்து ஏற்பட்டதாகக் கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : #CHINA #BRIDGE #COLLAPSE #CAR #ACCIDENT #LORRY #DEAD #INJURED #CCTV #VIDEO #XIJINPING