‘விபரீதத்தில் முடிந்த பந்தயம்’.. ‘மதுவுடன் தொடர்ந்து முட்டைகளை சாப்பிட்டவருக்கு நேர்ந்த சோகம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Nov 04, 2019 02:05 PM

நண்பர்களுடனான பந்தயத்திற்காக மதுவுடன் 42 முட்டைகளை சாப்பிட்டவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

UP Man dies after eating 42 raw eggs for a bet with friends

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த 40 வயது நபர் ஒருவருக்கு கடந்த 1ஆம் தேதி அவருடைய நண்பர்கள் ஒரு சவால் விடுத்துள்ளனர். அதன்படி அவர் ஒரு பாட்டில் மதுவுடன் 50 முட்டைகளை சாப்பிட்டால் 2000 ரூபாய் தருவதாக அவர்கள் கூறியுள்ளனர். நண்பர்களின் சவாலை ஏற்றுக்கொண்ட அந்த நபரும், மதுவை குடித்துக்கொண்டே ஒவ்வொரு முட்டையாக உடைத்துக் குடித்துள்ளார்.

இதையடுத்து 42 முட்டைகளை சாப்பிட்டிருந்த நிலையில் அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய நண்பர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #UTTARPRADESH #MAN #RAW #EGG #BET #FRIENDS #MONEY #DEAD #GANG #CHALLENGE