'தனியார் பள்ளிப் பேருந்து மோதி'... 'கணவர் கண்முன்னே மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 30, 2019 06:57 PM

காரைக்குடி அருகே தனியார் பள்ளிப் பேருந்து மோதியதில், கணவர் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

young couple got accident in bike and private school bus

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் பகுதியில் உள்ள, பாரதியார் தெருவைச் சேர்ந்தவர்கள் சண்முகம் (35), ரேவதி (30) தம்பதியினர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளநிலையில், இருவரும் கட்டிட வேலைக்கு சென்று வந்தனர். இந்நிலையில்,  காலை வழக்கம் போல், கணவன்-மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் கட்டிட வேலைக்கு புறப்பட்டனர். காரைக்குடியில் உள்ள ரெயில்வே ஜி.ஹெச். ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் ஓரம் இருந்த பாதாள சாக்கடைக்கான குழி மூடப்படாமல் இருந்துள்ளது.

இதனால் திடீரென வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது பின்னால் வந்த பேருந்து அவர்களின் வாகனத்தின் மீது மோதியதில், ரேவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்து வந்த, காரைக்குடி வடக்கு போலீசார், ரேவதி உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், காரைக்குடி சூடாமணி புரத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் ஜேம்ஸ் (49) என்பவரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #ACCIDENT #BIKE #SCHOOLBUS