'எக்ஸ்பிரஸ் வேகத்தில் தூக்கி வீசிய கார்'...குறுக்கே வந்த 3 நண்பர்கள்.. ஒரு நொடியில் நடந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Oct 30, 2019 02:55 PM
சென்னை மறைமலை நகர் அருகே சோழிங்கநல்லூர் நோக்கி சென்றுகொண்டிருந்த ஜேம்ஸ் ஜெயராஜ் என்பவர் காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையியில் போனபோது மூன்று பேர் கொண்ட இருசக்கர வாகனம் ஒன்று சாலையின் குறுக்கே வந்ததில், காரில் மோதி அடித்து தூக்க வீசப்பட்டனர்.

அந்த 3 பேரும் முள்ளிபக்கம் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம், காவனூர் பகுதியைச் சேர்ந்த வீரராகவன் மற்றும் கோபிநாத் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 3 பேரும் காவனூர் பகுதியில் இருந்து மறைமலை நகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, சாலையை குறுக்காக கடந்துள்ளனர்.
Mano accident footage... pic.twitter.com/BNGGm6t52Q
— Kamal (@kamal4win) October 29, 2019
அப்போது எக்ஸ்பிரஸ் வேகத்தில் வந்த ஜேம்ஸ் ஜெயராஜின் கார் மூன்று பேரையும் அடித்துத் தூக்கி வீசியபடி 10 அடி தூரம் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அனைவருமே செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
