'வாட்ஸ்ஆப் மூலம் பேராசிரியையின் தகாத வீடியோ!'.. 'மாணவனிடமும் கொடுத்த பேராசிரியர்'.. அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 06, 2019 07:03 PM

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவ தனது சக பேராசிரியையுடனான வாட்ஸ்-ஆப் வீடியோ உரையாடலை தகாத முறையில் படம் பிடித்ததாக போலீஸாருக்கு வந்துள்ள புகார் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Professor and Student assaulted lady professor using her video

பெண்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை இணையதளம் வழியாக ஆண் நண்பர்களுக்கு அனுப்புவதைத் தவிர்க்கச் சொல்லி காவல்துறையினர் எப்போதும் அறிவுறுத்தி வருவதுண்டு. ஆனாலும் அவற்றையும் மீறி சில அசம்பாவிதங்கள் நடந்துவிடுவதுண்டு. இதனால் பலரின் அந்தரங்க வாழ்வின் நிம்மதியும் தொலைவதை செய்திகளில் காண முடிகிறது.

இந்நிலையில் நாமக்கலில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை ஒருவருடன் நெருங்கிப் பழகிய அதே கல்லூரி பேராசிரியர், பேராசிரியையிடம் தகாத முறையில் வாட்ஸ்-ஆப் வீடியோ கால் பேசி, அதை ரகசியமாக ரெக்கார்டு செய்துகொண்டார்.

அதன் பின் அந்த வீடியோவை தன்னிடம் பயிலும் மாணவர் ஒருவரிடம் காண்பித்துள்ளதாகவும், அந்த மாணவர் அதை வைத்து, தனது பேராசிரியையை மிரட்டி தகாத முறையில் வீடியோ எடுத்து பணம் பறிக்கு முயன்றதாகவும் எழுந்துள்ள புகார்கள் நடுங்கவைத்துள்ளன.

Tags : #WHATSAPP #PROFESSOR