“மருத்துவமனை பெண் ஊழியருடன் நட்பு!”... “அவசர சிகிச்சை பிரிவுக்குள் அரிவாளுடன் வந்த நபர்”... “அலறிய வார்டு மக்கள்!”.. நடுங்க வைத்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Jan 07, 2020 10:17 AM
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் 57 வயதான ரவி. சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வார்டு பாயாக பணிபுரிந்து வரும் இவர், அதே மருத்துவமனையைச் சேர்ந்த பெண் ஊழியருடன் நட்பில் உள்ள நிலையில், அப்பெண்ணுக்கு தண்டையார் பேட்டையைச் சேர்ந்த 36 வயதான ஐயப்பன் என்பவருடனும் நட்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக ரவிக்கும் ஐயப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஐயப்பன் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் புகுந்து ஜனத்திரளுக்கு மத்தியில், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வார்டு பாய் ரவியை வெட்டியுள்ளார். இதைப் பார்த்ததும் மக்கள் கூட்டம் நடுங்கி ஓடத் தொடங்க, ரவியும் தப்பி ஓட முயற்சித்துள்ளார்.
ஆனாலும் விடாமல் அவரைத் துரத்திக் கொல்ல முயன்றுள்ளார் ஐயப்பன். இதனிடையே மருத்துவமனை ஊழியர்கள் போலீஸாருக்கு அளித்த தகவலின் பேரில், அருகிலேயே இருந்த போலீஸார், குறிப்பிட்ட இடத்துக்கு சென்று ஐயப்பனை மடக்கி பிடித்து வண்ணாரப் பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வெட்டு பட்ட ரவி அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
