'காதலிக்குற டைம் இருந்த சந்தோசம் இப்ப இல்ல'... 'கையில் இருந்த பிஞ்சு'... சென்னையில் நடந்த கோரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Feb 18, 2020 12:43 PM

கையில் இருந்த இரண்டு கைக்குழந்தைகளுடன், இளம் பெண் ரயிலில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai : Young woman with kids jumps in front of train in Avadi

ஆவடியை அடுத்த சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி விஜயலட்சுமி. காதலித்து திருமணம் செய்து கொண்ட இருவருக்கும், இரண்டு வயதில் கவியரசன் என்ற மகனும் நிஸ்வந்த் என்ற இரண்டு மாத கைக்குழந்தையும் உள்ளனர். முத்துக்குமார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வேலை செய்து வரும் நிலையில், இருவரும் காதலிக்கும் போது மகிழ்ச்சியாக இருந்த நிலையில், திருமணத்திற்குப் பின்பு அவ்வப்போது பிரச்சனைகள் வந்த வண்ணம் இருந்துள்ளது.

இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாகும் கூறப்படுகிறது. இதனால் கடும் விரக்தியில் இருந்த விஜயலட்சுமி, நேற்று தனது இரு கைக்குழந்தைகளுடன் ஆவடி பகுதிக்கு வந்துள்ளார். அப்போது திடீரென அங்குச் சென்று கொண்டிருந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோரச் சம்பவத்தில், எந்த பாவமும் அறியாத இரண்டு பிஞ்சு குழந்தைகளும் பரிதாபமாகப் பலியாகின.

இதையடுத்து சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் மூவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அறிந்த முத்துக்குமார் கதறி அழுதார். ஒரு நிமிட அவசர முடிவால் இன்று ஒரு குடும்பமே நிர்க்கதியானது தான் சோகத்தின் உச்சம்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றைத் தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

Tags : #SUICIDEATTEMPT #TRAIN #CHENNAI #AVADI #KIDS