‘திருமணம்’ நிச்சயிக்கப்பட்டு ஒரு வாரத்தில்... ‘பெற்றோர்’ கோயிலுக்கு சென்றிருந்தபோது நேர்ந்த சோகம்... ‘காதலனை’ தேடும் போலீசார்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Feb 14, 2020 02:54 PM

மைசூருவில் முன்னாள் காதலன் மிரட்டியதால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஒரு வாரத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mysore Girl Commits Suicide Before Marriage Over Lovers Blackmail

கர்நாடகா மாநிலம் மைசூருவைச் சேர்ந்தவர் மேக்னா (20). அவரும் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மேக்னாவின் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை தேடும் வேலையைத் தொடங்கியுள்ளனர். முதலில் பெற்றோரிடம் மறுப்பு தெரிவித்துவந்த மேக்னா பின்னர் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன் அவருக்கு பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதனால் மேக்னா மணிகண்டாவுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதையறிந்து அவருக்கு போன் செய்த மணிகண்டா, உடனடியாக திருமணத்தை நிறுத்திவிட்டு தன்னுடன் வந்து இருக்குமாறு கூறியுள்ளார். இல்லையென்றால் காதலிக்கும்போது இருவரும் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படங்களை வருங்காலக் கணவருக்கு அனுப்பிவிட்டு, சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்திருந்த மேக்னா நேற்று முன்தினம் பெற்றோர் கோவிலுக்குச் சென்றிருந்த நேரத்தில் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். பின்னர் போலீஸ் விசாரணையில், முன்னாள் காதலன் மிரட்டியதில் மனமுடைந்து மேக்னா தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மேக்னாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாகியுள்ள மணிகண்டாவைத் தேடி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

Tags : #KARNATAKA #SUICIDEATTEMPT #MYSORE #MARRIAGE #LOVER #BLACKMAIL