டீக்கடையில் காரை நிறுத்த சொன்ன ‘புதுமாப்பிள்ளை’.. ‘காத்திருந்த அதிர்ச்சி’.. கல்யாணம் ஆன சில மணிநேரத்தில் நடந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணம் ஆன சில மணிநேரங்களில் புதுமாப்பிள்ளை மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் துஷ்யந்த் கிரி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஆஷா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது திருமணத்துக்கு இரு வீட்டினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, நேற்று முன்தினம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மணமக்கள் காரில் வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தனர். அப்போது சாலையோரமாக உள்ள டீக்கடையில் துஷ்யந்த் கிரி காரை நிறுத்த சொல்லியுள்ளார்.
அதனால் உறவினர்கள் அனைவரும் அங்கு இறங்கி டீ குடித்துள்ளனர். அப்போது துஷ்யந்த் கிரி மட்டும் திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர் டீக்கடையை சுற்றி தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் துஷ்யந்த் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது டீக்கடையில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் மரம் ஒன்றில் துஷ்வந்த் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்துள்ளார். இதனை அடுத்து அவரை உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான சில மணிநேரங்களில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
