'மாணவியின் தொடையை துளைத்த குண்டு'... 'மொத்தமா முடிச்சிடுங்க'... பெத்தவங்க செஞ்ச கொடூரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Feb 17, 2020 02:51 PM

பெற்றோரின் சம்மதத்துடன், மாணவி ஒருவர் பெண்ணுறுப்பில் சுடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் நெஞ்சை பதைபதைக்க செய்துள்ளது.

Uttar Pradesh : 19-year-old gunned down by cousin in Meerut

உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே சர்தனா பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி டினா சவுத்ரி. இவர் தன்னுடன் படிக்கும் மாணவர் ஒருவரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் மாணவனின் சாதியை காரணம் காட்டிய அவரது பெற்றோர்கள், மாணவியின் காதலுக்கு தீவிர எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள். ஆனால் மாணவி டினா, தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் பெத்த மகளையே அவரது பெற்றோர்கள் கொலை செய்ய முடிவு செய்தனர்.

இதையடுத்து டினாவின் உறவினர் கிட்டு என்கிற பிரசாந்த் சவுத்ரி, நண்பர்களுடன் சேர்ந்து டினாவை கொடூரமாக சுட்டு கொலை செய்தான். டினாவின் பெண்ணுறுப்பிலும் தொடை பகுதியிலும் 3 முறை சுட்டு கொடூரமாக கொன்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையிடம் இருந்து தப்பிக்க மாணவி டினாவின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவர்கள், கொள்ளையர்கள் வீடு புகுந்து டினாவை சுட்டு கொன்றுவிட்டதாக கூறி நாடகமாடியுள்ளார்கள்.

இந்நிலையில் சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் டினாவின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது பெற்றோர் உட்பட டினாவின் உறவினர்கள் இந்த பாதக செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கிட்டு மற்றும் டினா குடும்பத்தினர் மீது கொலை, கொடூர செயல், ஆதாரங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்கள்.

மகள் வேறு சாதி பையனை காதலித்தாள் என்ற ஒரே காரணத்திற்காக பெற்றோர் துணையோடு மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #UTTARPRADESH #POLICE #COLLEGESTUDENT #GUNNED DOWN #MEERUT