'திடீரென' வந்த போன் கால்... வேகமாக ஓடிச்சென்று, 5-வது மாடியில் இருந்து குதித்து... 'தற்கொலை' செய்துகொண்ட 'பெண்' என்ஜினீயர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்போன் கால் பேசிவிட்டு கையோடு பெண் என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலத்தை சேர்ந்த பெண் என்ஜினீயர் ஊர்மிளா(23) என்பவர் சென்னை நாவலூரில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் ஊர்மிளா வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென அவருக்கு ஒரு போன் கால் வந்தது. போனை எடுத்துப்பேசிய ஊர்மிளா பதட்டத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கம்பெனியின் 5-வது மாடிக்கு வேகமாக சென்ற அவர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஊர்மிளாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து அவரது பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் ஊர்மிளாவுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
