'செல்போன் ஹெட்செட்'டில் பாடல் கேட்டுக் கொண்டு... தண்டவாளத்தை கடக்க முயன்ற 'மாணவர்'... அதிவேகத்தில் வந்த 'ரயில்'... உடல் சிதறி... பதைபதைக்க வைக்கும் கோரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Feb 19, 2020 05:44 PM

காதில் ஹெட்செட் அணிந்து பாட்டு கேட்டுக்கொண்டே தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவன், ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

college student listening songs hit by train near tiruvallur

திருவள்ளூர் ஆயில் மில் பகுதியை சேர்ந்த மிதுன் என்ற மாணவர் திருநின்றவூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இன்று காலை வழக்கம்போல அவர் கல்லூரிக்கு புறப்பட்டுள்ளார். ரயிலில் செல்ல திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்த அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.

அந்த சமயம், சென்னையில் இருந்து கோவை சென்ற சதாப்தி விரைவு ரயில், மாணவன் மிதுன் மீது மோதியது. இதில், மிதுன் ரயிலில் சிக்கி இழுத்து செல்லப்பட்டதில் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அந்த விரைவு ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தகவலறிந்த திருவள்ளூர் ரயில்வே காவல் துறையினர் மிதுனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் , உயிரிழந்த மாணவன் மிதுன், காதில் செல்போன் ஹெட்செட் அணிந்து பாட்டு கேட்டுக் கொண்டு தண்டவாளத்தை கடந்ததால், விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் சதாப்தி விரைவு ரயில் 20 நிமிடங்கள்  காலதாமதமாக சென்றது.

Tags : #TRAINACCIDENT #COLLEGESTUDENT #PHONE #HEADSET