'12-ம் வகுப்பில்'... 'இந்தப் பாடம் படிக்காமலும்'... 'இன்ஜினியரிங் சேரலாம்'... விபரங்கள் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொறியியல் படிப்பில் சேர பிளஸ்-2 வகுப்பில் வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை என்று ஏ.ஐ.சி.டி.இ. அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
All India Council for Technical Education (AICTE) எனப்படும் அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் நடப்பு கல்வியாண்டிற்கு பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி, பொறியியல் படிப்பில் சேருவதற்கு வேதியியல் படிப்பு கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ளது. பொதுவாக இன்ஜினியரிங் படிப்பில் சேர வேண்டுமென்றால், 11, 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், கம்ப்யூட்டர் சைன்ஸ் கட்டாயம் படித்திருக்க வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது.
இந்த சூழலில் ஏஐசிடிஇ கல்விக்குழு தற்போது பொறியியல் படிப்பிற்கான விதிமுறைகளை திருத்தி வருகிறது. அதன்படி, இன்ஜினியரிங் படிப்பிற்கு 12-ம் வகுப்பில் வேதியியல் படிப்பு கட்டாயமில்லை என்று அறிவித்துள்ளது. அதாவது, கட்டாயப் படிப்பில் இருந்து வேதியியல் பாடம் நீக்கப்பட்டுள்ளது. படித்திருந்தாலும் தவறில்லை என்பது தான் ஏ.ஐ.சி.டி.இ.-யின் தகவலாக இருக்கிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பானது இந்த ஆண்டே அமலுக்கு வருகிறது.
12-ம் வகுப்பு தேர்வு முடிவுக்கு பிறகு இன்ஜினியரிங் படிப்பிற்கான சேர்க்கை நடைபெறவிருக்கிறது. எனவே 12-ம் வகுப்பில் வேதியியல் படிக்காத மாணவர்கள் கூட பொறியியல் படிப்பில் சேரலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது மாணவர்களில் ஒரு சிலருக்கு மகிழ்ச்சியும், ஒரு சிலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.