'பிறந்தநாள்' கொண்டாட சென்ற மாணவி... 'காதலன்' கண்முன்னே பலியான பரிதாபம்... கதறித்துடித்த காதலன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Feb 14, 2020 10:06 PM

காதலனுடன் பிறந்தநாள் கொண்டாட வெளியில் சென்ற கல்லூரி மாணவி, அவரின் கண்முன்னே பலியான பரிதாபம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

College Student Died in road Accident on Birthday, Details

சேலம் ஏற்காடு பகுதியை சேர்ந்த ஆர்த்தி(19) என்ற கல்லூரி மாணவியும், திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த அசோக்(25) என்னும் வாலிபரும் காதலித்து வந்தனர். நேற்று ஆர்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் அசோக்குடன் பிறந்தநாள் கொண்டாட வெளியில் சென்றுள்ளார். இருவரும் பைக்கில் பெங்களூர் வரை சென்று அங்கு பிறந்தநாளை கொண்டாட ஆசைப்பட்டு உள்ளனர்.

பைக்கில் சென்றபோது தனக்கு பைக் ஓட்ட கற்றுத்தரும்படி ஆர்த்தி கேட்டிருக்கிறார். இதையடுத்து அசோக் அவரை முன்னால் உட்கார வைத்து பைக் ஓட்ட கற்றுத்தந்து இருக்கிறார். தீவட்டிப்பட்டி அருகே சென்றபோது மற்றொரு பைக்கில் இவர்கள் சென்ற பைக் மோதியது. இதில் ஆர்த்தி நிலைதடுமாறி கீழே விழ, சரியாக அந்நேரம் ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு பின்னால் வந்த லாரியில்  ஆர்த்தியின் தலை மற்றும் உடல் சிக்கியது. இதில் ஆர்த்தி அசோக் கண்முன்னே பரிதாபமாக பலியானார்.

ஆர்த்தி ரோட்டில் உருண்டு விழுவதை பார்த்து லாரி டிரைவர் லாரியை வலதுபுறமாக திருப்பி விபத்தினை தவிர்க்க பார்த்திருக்கிறார். எனினும் ஆர்த்தியின் உடல் பின்சக்கரத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் விபத்தினை தவிர்க்க முடியவில்லை. தன்னுடைய கண்முன்னே ஆர்த்தி பலியானதை பார்த்து அசோக் கதறியழுதார். விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.