‘சுற்றுலா பயணிகளின் காரை வழிமறித்து’.. ‘ஏறி உட்கார்ந்த யானை’.. ‘பதறவைக்கும் வீடியோ’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Nov 06, 2019 06:10 PM

தாய்லாந்தில் சுற்றுலா பயணிகள் சென்ற கார் ஒன்றின் மீது யானை ஏறி உட்காரும் பதறவைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

Viral Video Thailand Elephant Sits On Tourists Car

தாய்லாந்தில் உள்ள காவ் யாய் தேசிய பூங்காவில் கடந்த வாரம் சுற்றுலா பயணிகள் சென்றுகொண்டிருந்த காரை யானை ஒன்று வழிமறித்துள்ளது. 35 வயதான டூயோ என்ற அந்த யானை பூங்கா வழியாக வந்த காரை மறித்து, அதன் மீது ஏறி உட்காரப் பார்த்துள்ளது. அப்போது யானையின் பிடியில் சிறிது தளர்வு ஏற்பட்டதும் ஓட்டுநர் காரை இயக்கியதால் உள்ளே இருந்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

இதில் காருக்குள் இருந்தவர்கள் காயமின்றி தப்பித்தபோதும், காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #THAILAND #ELEPHANT #VIRAL #VIDEO #CAR #TOURIST #PARK