இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
முகப்பு > செய்திகள் > உலகம்1. தமிழக அரசின் 2020-21ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப் பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

2. சீனாவில் கொரோனா எனப்படும் கோவிட் 19 வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,500ஐ நெருங்கியுள்ளது.
3. பிரிட்டனின் புதிய நிதியமைச்சராக இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் நியமிக்கப்பட்டுள்ளார்.
4. பிரிதிவி ஷாவை விட ஷுப்மன் கில்தான் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக இறங்க சரியான தேர்வு என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
5. டெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் 16ஆம் தேதி நடக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
6. தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலமாக ரூ 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்திருப்பதாக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
7. நாகை மாவட்டம் வேதாரண்யத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 620 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள போலீசார் இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்தவர்கள் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.
8. உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
9. அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்தியப் பயணத்தின்போது ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவுக்கு விற்பதற்கான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
10. தான் ரஷ்யாவின் அதிபராக இருக்கும்வரை தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை சட்டபூர்வமாக்க மாட்டேன் என்று புதின் தெரிவித்துள்ளார்.
11. மத்திய வெளியுறவுத் துறையின் கீழ் வரும் இரு முக்கியமான நிறுவனங்களுக்கு மறைந்த முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பெயரை மத்திய அரசு சூட்டியுள்ளது.
12. நிர்பயா வழக்கில் தனது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததை எதிர்த்து வினய் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
13. சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதலில் சிரிய பாதுகாப்பு படையினர் 55 பேர் உயிரிழந்துள்ளனர்.
