‘எங்க கேங்ல சேரமாட்டியா’... ‘மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவர்’... ‘நண்பனின் அதிர்ச்சியளித்த வாக்குமூலம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 11, 2019 11:47 AM

நண்பன் வீட்டுக்குச் சென்ற, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர், துப்பாக்கியால் சுட்டுகொலை செய்யப்பட்ட விஷயத்தில், அவரது நண்பர் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.

polytechnic student murdered by his friend gives confession

சென்னை வண்டலூர் அருகே வேங்கடமங்கலத்தைச் சேர்ந்த முகேஷ், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 5-ம் தேதி, இவர் வீட்டின் அருகே உள்ள, தனது நண்பர் விஜய்யின் வீட்டுக்கு சென்ற முகேஷ், அங்கு அவருடன் தனியறையில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவர்களது அறையில் துப்பாக்கிச் சத்தம் திடீர் எனக் கேட்க, ஹாலில் இருந்த விஜயின் அண்ணன், உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில், முகேஷ் உயிருக்குத் போராட, பதட்டமே இல்லாமல் கையில் துப்பாக்கியுடன் விஜய் அருகில் நின்றுள்ளார். 

இதனைக் கண்டு பதறிப்போன அவரது அண்ணன், சுதாரிப்பதற்குள் விஜய் அங்கேயிருந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்ததுடன், முகேஷை மீட்டு, அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே, முகேஷ் உயிரிழத்தார். நண்பனை சுட்டுவிட்டு, விஜய் தப்பியோடிய நிலையில், அவரின் குடும்பத்தாரிடம், போலீசார் விசாரணை நடத்தினர். அதில், முதலில் பப்ஜி வீடியோ கேம் சண்டையால்தான், இந்த கொலை நிகழ்ந்திருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த விஜய், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தப்பின், அவரிடம் நடத்திய விசாரணையில், பெருமாட்டுநல்லூர் பகுதியில் இயங்கிவரும் ரவுடி கும்பல் ஒன்றில் விஜய் இருக்கிறார். இந்தக் கும்பலில் சேர, நண்பன் முகேஷை, விஜய் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதை அவர் மறுக்கவே, வாக்குவாதத்தில் முகேஷை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சிடைந்த போலீசார், விஜயிடம் மேலும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : #MURDER #CHENNAI #MURDERED #GUN #SHOT