‘ஜர்னலிஸ்ட் கேட்ட ஒரு கேள்வி’... ‘திணறிய அஸ்வின்’... வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Nov 17, 2019 09:44 PM

வங்கதேசத்துக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு, அஸ்வினின் பதில் வைரலாகி வருகிறது.

watch Ashwin Stumped By Journalist\'s Clean And Pure Hindi

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி நடைப்பெற்றது. இதில், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்றது. இந்நிலையில், இந்தப் போட்டியின்போது, பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. அப்போது, அஸ்வின் அளித்த பதில் வைரலாகி வருகிறது. அதில் பத்திரிக்கையாளர் ஒருவர், டெஸ்ட் போட்டி பற்றி இந்தியில் கேள்வி எழுப்பினார்.

இதனை புரிந்துகொள்ள முடியாமல் தவித்த அஸ்வின், இந்தி மொழி பேசுவது குறித்து, தனது போராட்டத்தை தெரிவித்தார். ‘கடின உழைப்பால், தற்போது இந்தி பேசத் தொடங்கியுள்ளேன். பல வருடங்களுக்குப் பிறகு, தற்போது இந்தி கொஞ்சம் நன்றாக வருகிறது. ஆனால் இதுபோன்ற கலப்பில்லாத இந்தியில், என்னை யாரும் கேள்வி கேட்கவில்லை. அதனால் உங்களுக்கு முதலில் நன்றி. இன்னும் தாங்கள் கேட்ட கேள்வி என்ன என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்’ என்று கூறினார். இதற்கு, அஸ்வின் மட்டும் அல்லாது பலரும் நகைச்சுவையாக சிரித்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.