‘கண் இமைக்கும் நேரத்தில்’.. தனியார் பேருந்துகள் ‘நேருக்கு நேர் மோதி’ பயங்கர விபத்து..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 11, 2019 12:23 PM

சேலம் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 43 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

One Dead 43 Injured In Private Bus Accident Near Salem

சென்னையில் இருந்து கேரளா நோக்கிச் சென்ற பர்வீன் தனியார் பேருந்தும், ஈரோட்டிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றும் மகுடஞ்சாவடி அருகே உள்ள தாழையூர்  என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. சேலம் - ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த பயங்கர விபத்தில் 2 பேருந்துகளின் முன்பகுதியும் முழுவதுமாக சேதமடைந்துள்ளது.

இந்த கோர விபத்தில் பர்வீன் தனியார் பேருந்து ஓட்டுநரான விருதுநகரைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இதில் படுகாயமடைந்த 43 பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #SALEM #PRIVATEBUS #BUS #HIGHWAY #DEAD #INJURED #ERODE