'இன்னும் ஒருவாரம்தான் இருக்கு’... 'திட்டம் தீட்டி இளைஞர் செய்த காரியம்’... 'அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Nov 13, 2019 07:47 PM

அரசு வேலைக்காக தனது தந்தையை, திட்டம் தீட்டி மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

man killed his father to get government job blinded by greed

சத்தீஸ்கர் மாநிலம் ஜஸ்பூர் மாவட்டம் சன்னா கிராமத்தைச் சேர்ந்தவர் மஹாபீர் சாய். அங்கு உள்ள அரசு சுகாதார மையத்தில், இவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, இவரது கிராமத்திற்கு அருகே உள்ள காட்டில், தலையில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்திருந்தநிலையில், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மஹாபீர் சாயின் இளைய மகனான ஜீவா சாய் (28), இருவருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. தந்தை மஹாபீர் சாய் அரசு வேலையிலிருந்து இந்த வாரம் ஓய்வு பெற இருந்தார். அரசு வேலையில் இருக்கும்போது ஒருவர் உயிரிழந்தால், அவர்களது வேலை, அவரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கிடைக்கும். இதனை பயன்படுத்தி, வேலையில்லாமல் சுற்றி வந்த அவரது இளைய மகன் ஜீவா, தந்தையை கொலை செய்து, அவரது வேலையை வாங்கிவிடலாம் என திட்டமிட்டுள்ளார். 

அதன்பின்னர், ஓய்வுபெற இருந்த தந்தையை கொலை செய்துவிட்டு, எதுவும் தெரியாததுபோல் இருந்துள்ளார். இதனைக் கேட்டு போலீசார் மட்டுமின்றி, அவரது குடும்பத்தினரும் அதிர்ந்து போயினர். இதையடுத்து, ஜீவாவை கைதுசெய்த போலீசார், கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்களையும் கைதுசெய்துள்ளனர்.

Tags : #MAN #YOUTH #KILLED #MURDERED #FATHER #SON