450 வீடியோக்கள்.... 'முக்கிய' பிரமுகர்களின் 'வீட்டு' பெண்களையும் விட்டு வைக்காத காசி... அதிர்ந்து போன போலீசார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெண்களை ஏமாற்றி பணம் பறித்த காசி குறித்து போலீசார் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நாகர்கோவிலை சேர்ந்த காசி என்கிற சுஜி சமூக வலைதளங்கள் வழியாக பெண்களுடன் நெருக்கமாக பழகி பின்னர் அதை வைத்து அவர்களிடம் மிரட்டி பணம் பறித்ததாக சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் புகார் அளித்தார். இதையடுத்து எக்கச்சக்க புகார்கள் அவர்மீது குவிய மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காசியை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழும் அவர்மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
சமீபத்தில் மகள்களின் வீடியோக்களை வைத்து அம்மாக்களையும் மிரட்டி காசி அவர்களுடன் நெருக்கமாக இருந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் முக்கிய பிரமுகர்கள் வீட்டு பெண்களுடனும் காசி நெருக்கமாக இருந்த வீடியோக்கள் போலீசார் கைக்கு கிடைத்து இருக்கிறதாம். இதைப்பார்த்து அவர்கள் அதிர்ந்து போனதாக கூறப்படுகிறது . காசியின் லேப் டாப் மற்றும் செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில் ஏராளமான பெண்களுடன் எடுத்துக்கொண்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது. அந்த வீடியோக்களில் இருந்த பெண்களின் விவரம் முன்னர் தெரியாமல் இருந்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது காசியின் லேப் டாப்பில் உள்ள வீடியோக்களில் குடும்ப பெண்கள் பலரின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவர்களில் முக்கிய பிரமுகர்களின் குடும்ப பெண்களும் அடங்குவர். இவ்வாறு வீடியோக்கள் இருப்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியவில்லை. ஏனென்றால் அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் காசி ஈடுபடவில்லை. மற்றபடி அவர்களிடம் நெருக்கமாக இருந்துள்ளார்.
ஒருசிலர் காசியால் மிரட்டப்பட்டு இருந்தாலும் குடும்ப மானம் போய் விடும் என பயந்து புகார் அளிக்க முன்வரவில்லை என கூறப்படுகிறது. குமரி மட்டுமின்றி கோவை, சென்னை ஆகிய பகுதிகளை சேர்ந்த பணக்கார வீட்டு பெண்களுடன் காசி நெருக்கமாக இருக்கும் வீடியோக்களும் லேப்-டாப்பில் இருப்பதாக தெரிகிறது. சுமார் 450-க்கும் அதிகமான வீடியோக்கள் காசியின் லேப்டாப்பில் இருக்கிறதாம். இதையடுத்து வீடியோக்களில் இருந்த காசியின் நண்பர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் மேலும் இந்த விசாரணையில் பல முக்கிய திருப்பங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.