"மாணவிகளுக்கு தைரியம்!".. "அயராத கொரோனா பணி!" .. 'சென்னையின்' பிரபல 'மருத்துவமனை' டீனுக்கு 'கொரோனா'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக உள்ளதால், அதனை எதிர்த்து தடுப்பு நடவடிக்கைகளையும், மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதனோடு இணைந்து மாநில அரசுகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் என்று மட்டும் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் சென்னையில் மட்டும் என்று 529 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியதை அடுத்து தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே சென்னையில் 20-க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், ஸ்டான்லி மருத்துவமனை டீன், கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கான வலுவான அமைப்பை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உருவாக்கி திறம்பட செயலாற்றி வந்தார். இதனிடையே மருத்துவமாணவிகள் இருவர் கொரோனா பயத்தால் அச்சமடைந்திருந்தபோது, அவர்களுக்கு தைரியம் கூறி ஸ்டான்லி மருத்துவமனை டீன் தேற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
