'என் மனைவிய அடக்கம் பண்ணனும், கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க...' 'கதவை மூடிய உறவினர்கள்...' போலீசார் செய்த மகத்தான காரியம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | May 19, 2020 05:13 PM

கொரோனா அச்சம் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இறந்த மனைவியை அடக்கம் செய்ய தவித்தவருக்கு மூன்று போலீசார் உதவிய சம்பவம் அனைவராலும் பாராட்டப்படுகிறது.

Three policemen who helped the man to bury his wife

66 வயதான ஜஸ்பால் சிங் மனைவி சுதா சிங் மற்றும் மாற்றுத்திறனாளியான 22 வயது மகனுடன் டெல்லியின் ஜெயித்பூரின் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சுதா சிங்கிற்கு கடந்த ஏழு மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார். அதையடுத்து கடந்த சனிக்கிழமை இரவு உணவு சாப்பிட்டுப்படுத்த சுதா காலையில் எழுந்திருக்கவில்லை.

அதிர்ச்சியடைந்த ஜஸ்பால் தன் மாற்றுத்திறனாளி மகனை வைத்து ஒன்னும் செய்ய முடியாமல், அக்கம் பக்கத்தில் இருக்கும் உறவினர்களை உதவிக்கு அழைத்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக ஜஸ்பாலுக்கு யாரும் உதவாமல் வீட்டுக் கதவை மூடியுள்ளனர்.

மன வேதனையடைந்த ஜஸ்பால் சிங் என்ன செய்வதென்று தெரியாமல் அருகில் இருந்த ஜெயித்பூர் காவல் நிலையத்துக்கு சென்று நடந்தவற்றைக்கூறி, மனைவியின் இறுதி சடங்கிற்கு உதவி கேட்டுள்ளார்.

ஜஸ்பால் சிங்கின் நிலைமையை உணர்ந்த காவல் அதிகாரியின் உத்தரவின் பேரில் கான்ஸ்டபிள்கள் சுனில், பர்வீன், தர்மேந்திரா, மற்றும் ராகுல் ஆகியோர் ஜஸ்பாலுக்கு உதவினார். மேலும் காவலர்கள் தான்  ஜஸ்பால் மனைவியின் இறுதி சடங்குகளுக்கான தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.

பின்பு இறந்த சுதாவின் சடலத்தை ஜஸ்பால் உள்ளிட்ட  மூன்று காவல் அதிகாரிகள் சேர்ந்து சுமார் 1 கி.மீ தூரத்தில் உள்ள தகன மைதானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி அனைவரும் காவலர்களின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

Tags : #POLICE