வீட்டுக்கு வந்த தந்தையின் நண்பரால்... 16 வயது சிறுமிக்கு... நிகழ்ந்த வேதனையான சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 03, 2020 11:54 AM

வீட்டுக்கு வந்த தந்தையின் நண்பரால், 16 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதால், தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

girl attempts suicide after molested by father\'s friend

சென்னை ஓட்டேரி, எஸ்.எஸ்.புரத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமி அருகில் உள்ள அத்தை வீட்டில் இருந்துள்ளார். கடந்த புதன்கிழமை அன்று காலை புத்தாண்டு தினத்தன்று, சிறுமியின் தந்தையுடன் வேலை செய்து வரும் சமோசா வியாபாரியும், நண்பருமான, அதேப் பகுதியைச் சேர்ந்த அப்துல் பஷீர் என்பவர், அவர்களது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் சிறுமி தனியாக இருந்ததைக் கண்டு  சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுமி கூச்சலிட, ஆத்திரம் அடைந்த அப்துல் பஷீர், சிறுமியை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதனால் மனவேதனை அடைந்த சிறுமி வீட்டில் இருந்த வார்னிசை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் வீட்டுக்கு வந்த அத்தை, சிறுமியின் நிலையை பார்த்து அதிர்ந்துபோய், உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிறுமியின் உறவினர் தலைமைச் செயலக காலணி மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில்  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்துல் பஷீரை கைது செய்தனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #SUICIDE #ATTEMPT #FATHER #FRIEND