‘உன்ன விட்டு என்னால இருக்க முடியாது’... சிறு வயதில் விளையாண்ட மரத்தடியிலேயே... இரட்டையர்கள் எடுத்த ‘விபரீத’ முடிவு... உருக்கம் தெரிவித்த ‘காதலி’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Dec 30, 2019 11:24 PM

"My Big Fat Gypsy Wedding" என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த ஆண் இரட்டையர்கள் தாங்கள் சிறு வயதில் விளையாண்ட மரத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Twin Brothers Committed Suicide Due To Cancer Illness

இங்கிலாந்து Kent-ல் உள்ள Sevenoaks நகரத்தில், Dibden Lane அருகே வசித்து வந்தவர்கள் இரட்டையர்களான பில்லி  மற்றும் ஜோ ஸ்மித். இவர்கள் இருவரும் கடந்த 16-ம் தேதி தான் தங்களது 32-வது பிறந்த நாளை கொண்டாடினர். இரட்டையர்கள் இருவரும் My Big Fat Gypsy Wedding என்ற Reality Show மூலம் பிரபலமடைந்தவர்கள். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று, காலை 11 மணியளவில் இருவரும் வீட்டில் காணாததால், பதறிப்போன அவரது தந்தை, இரட்டையர்கள் இருவரும் சிறுவயதில் விளையாடும் மரத்தருகே ஓடிச் சென்று பார்த்துள்ளார். அங்கே அந்த மரத்தில் இருவரும் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரின் சடலங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், இரட்டையர்களில் ஒருவரான ஜோவுக்கு கேன்சர் இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு கீமோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மற்றொரு இரட்டையரான பில்லி இதனால் மனமுடைந்துப் போனார். மேலும் ‘நீயில்லாமல் தன்னால் இருக்க முடியாது’ என்று ஜோவிடம், பில்லி கூறி வந்துள்ளார். 

கேன்சரால் இருவருமே மன அழுத்தத்தில் இருந்துள்ளனர். இதற்கிடையில், ஜோ தனது குடும்பத்தாரிடம் கீமோ தெரபி சிகிச்சையால் தனது உடல்நலம் நன்றாக ஆகிக் கொண்டு வருவதாக பொய்யாக தெரிவித்து வந்த நிலையில், இரட்டையர்கள் இருவரும் சேர்ந்தே தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்து, தாங்கள் சிறு வயதில் விளையாடும் மரத்திலேயே தற்கொலை செய்து கொண்டனர். இவர்களின் மரணம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாக பிறந்தனர், ஒன்றாக இறந்துள்ளனர் என்று ரசிகர் ஒருவர் உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் இரட்டையர்களில் ஒருவரான பில்லியின் காதலி கிறிஸ்டினா, ‘இது மிகவும் கடினமான நாள், என்னுடைய பில்லிக்கு ஆழ்ந்த இரங்கல்கள். உண்மையான அன்புடன் நீ இருந்தாய். என்னை மிகவும் சந்தோஷமாக பார்த்துக்கொண்டாய். எனக்காக எல்லாவற்றையும் செய்தாய். உன்னைப்போல் அன்பு காட்டியவர் எவரும் இல்லை. ஆனால் இதுபோன்று நடக்கும் என்று நீயே எதிர்பார்த்திருக்க மாட்டாய்’ என்று உருக்கம் தெரிவித்துள்ளார்.  அக்கம்பக்கத்தினரால் நல்ல பையன்கள் என்று பெயர் எடுக்கப்பட்ட இவர்கள் இறப்பு அங்குள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #SUICIDE #BROTHERS #TWINS