VIDEO: ‘சர்ப்ரைஸ் கிறிஸ்துமஸ் கிஃப்ட்’!.. ‘மகிழ்ச்சியில் ஷாக்கான மகள்’.. ‘கண்கலங்கிய அப்பா’!.. அப்டி என்ன கிஃப்ட் தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > உலகம்By Selvakumar | Dec 25, 2019 05:02 PM
தந்தை தனது குழந்தைக்கு கிறிஸ்துமஸ் பரிசு கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக குழந்தைக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என எண்ணி ஒரு கவரில் வாழைப்பழத்தை சுருட்டு தந்தை கொடுத்துள்ளார். ஆனால் குழந்தையை விளையாட்டாக ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த பரிசை கொடுத்துள்ளார். இதை ஆவலுடன் பிரித்த குழந்தை, உள்ளே வாழைப்பழம் இருந்ததைப் பார்த்ததும் ‘பனானா, பனானா’ என மகிழ்ச்சியில் துள்ளியுள்ளது.
இதனை அடுத்து வாழைப்பழத்தை தனது அம்மாவிடம் கொடுத்து உரித்து தரச் சொல்லி மகிழ்ச்சியாக சாப்பிட்டுள்ளார். இதுகுறித்து பதிவிட்ட குழந்தையின் தந்தை, ‘நான் என் குழந்தைக்கு ஒரு மோசமான கிறிஸ்துமஸ் பரிசை கொடுத்து ஏமாற்ற நினைத்தேன். ஆனால் குழந்தையின் இந்த மகிழ்ச்சியை நான் எதிர்பார்க்கவில்லை’ என கண்கலங்க பதிவிட்டுள்ளார். தந்தையின் பரிசு எதுவாயினும் அதை உண்மையான அன்புடன் வாங்கிக்கொண்ட குழந்தையின் க்யூட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
I Tried Giving My Daughter The Worst Xmas Gift Ever & I Didn’t Expect This Reaction 😢 pic.twitter.com/44cJytI83m
— LGND (@iamlgndfrvr) December 20, 2019
