கண்ண க்ளோஸ் பண்ணுங்க... சர்ப்ரைஸ் தர்றேன்... மகளின் ‘தோழி’யால்... ‘தந்தை’க்கு நடந்த கொடூரம்... ‘சென்னை’யில் உறைய வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 24, 2019 04:16 PM

சென்னையில் முறை தவறிய காதலால், ஆபாச படமெடுத்து மிரட்டிய தோழியின் தந்தையை, இளம்பெண் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

chennai man murdered by his daughter\'s friend due to affair

சென்னை புதுவண்ணாரப்பேட்டை துறைமுகம் குடியிருப்பு அருகே அம்மணி அம்மன் திட்ட சாலையில் ரத்த வெள்ளத்தில், கழுத்தில் வெட்டு காயங்களுடன் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக, போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், அங்கு சென்ற போலீசார், அவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை நடத்தினர். அதில் சடலமாக கிடந்தவர், திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியைச் சேர்ந்த கற்பூர வியாபாரி சேகர் (59) என்பது தெரியவந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், ‘சேகரின் மகளும் திருவொற்றியூரைச் சேர்ந்த பெண் ஒருவரும், அப்பகுதியில் ஒன்றாகப் படித்து வந்துள்ளனர்.

இதனால் சேகரின் வீட்டுக்கு அந்தப் பெண் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது தோழியின் தந்தை என்ற முறையில், சேகருடன் கடந்த 5 ஆண்டுகளாக பழகி வந்துள்ளார். தற்போது 22 வயதாகும் அந்தப் பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதால், சேகருடன்  பேசுவதை தவிர்த்துள்ளார். இது, சேகருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதால், நீயும் நானும் பழகியபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த இளம் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர், சேகர் உயிரோடு இருந்தால் நிச்சயம் தனக்கு ஆபத்து என்று கருதிய இளம் பெண், தோழியின் தந்தையான சேகரை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். நேற்று மதியம் சேகரின் பிறந்த நாளையொட்டி, அவருக்குப் ஃபோன் செய்தவர், உங்களைச் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து, நேற்று மாலை 6 மணியளவில் இருவரும் நேரில் சந்தித்துள்ளனர். பின்னர் இருவரும் அடையாறு வரை பைக்கில் சென்றுவிட்டு, இரவு 9 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். 

அப்போது, வழக்கமாக சந்திக்கும் புதுவண்ணாரப்பேட்டை துறைமுகம் குடியிருப்பு அம்மணி அம்மன் திட்ட சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த இளம் பெண், `கண்ணை மூடிக்கொள்ளுங்கள், உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தருகிறேன்' என்று கூறியுள்ளார். அதைக்கேட்ட சேகரும் சந்தோஷத்துடன் கண்ணை மூடியுள்ளார். அப்போது கையில் வைத்திருந்த ஃபெவிகுவிக் பசையை சேகரின் முகத்தில் ஊற்றிய அந்தப் பெண், சேகர் யோசிப்பதற்குள் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சேகரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

ஃபெவிகுவிக் சேகரின் வாய்ப் பகுதியில் ஒட்டிக்கொண்டதால் அவரால் சத்தம் போட முடியவில்லை. இதையடுத்து, ரத்தம் படிந்த சுடிதார் மற்றும் கத்தியை மறைத்து வைத்துவிட்டு அந்த இளம் பெண் அங்கிருந்து வீட்டுக்குச் சென்றுவிட்டார். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில் இது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அந்த இளம் பெண்ணை கைதுசெய்த போலீசாரிடம், `தோழியின் தந்தை சேகரிடம் நான் முதலில் நட்பாகத்தான் பழகினேன். ஆனால், நாளடைவில் அந்தப் பழக்கம் தவறான பாதைக்கு மாறிவிட்டது’ எனக் கூறியிருக்கிறார். 

மேலும் படிக்க: 'தோழியின் தந்தை இறந்த வழக்கில்’... 'இளம்பெண் கொடுத்த வாக்குமூலம்!

Tags : #FATHER #DAUGHTER #FRIEND