பிரபல இசைக்குழு ‘லஷ்மன் ஸ்ருதி’ உரிமையாளர் ராமன் ‘சென்னை’ வீட்டில் ‘அதிர்ச்சி’ மரணம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Dec 25, 2019 01:43 PM

பிரபல இசை கச்சேரி குழுவான லஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் ராமன் அவருடைய சென்னை வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Lakshman Sruthi Owner Raman Passed Away

இதுதொடர்பாக விகடன், புதிய தலைமுறை ஆகிய செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, லஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர்களில் ஒருவரான ராமன் நேற்றிரவு நடைபெற்ற ‘சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பியவர் நீண்ட நேரமாகியும் அறைக்குள்ளேயே இருந்ததால் சந்தேகமடைந்த அவருடைய குடும்பத்தினர் கதவைத் தட்டிப் பார்த்துள்ளனர். அப்போதும் ராமன் கதவைத் திறக்காமலேயே இருக்க, அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சில நாட்களாகவே ராமன் உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்ததாக அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மன அழுத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

Tags : #CHENNAI #LAKSHMANSRUTHI #RAMAN #SUICIDE